லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை நவம்பர் மாதத்திற்கு மாற்றமில்லாமல் இருக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, நவம்பர் மாதத்துக்கான லிட்ரோ உள்நாட்டு எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும் , 5 கிலோகிராம் சமையல் எரிவாயு 1,482 ரூபாவிற்கும் , 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு 694 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்தோடு நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் அந் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாய்க்கும், 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 1,477 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇