வாஷிங்டன் உலகின் முதல் இட பணக்காரர் பட்டியலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி, ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் 10.09.2025 அன்று முதல் இடத்தை பிடித்தார். ஆனால் சில மணி நேரங்களில் மீண்டும் எலான் மஸ்க் முதலிடத்திற்கு வந்தார்.
உலகின் பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான முதல் இ டப் பணக்காரர்கள் பட்டியலை10.09.2025 அன்று வெளியிடப்பட்டது.
அதில், 385 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்த எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கை, ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் பின்னுக்குத் தள்ளினார். இவரது சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
கடந்த 2021ம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதல்முறையாக முதலிடத்திற்கு முன்னேறினார். அதன்பிறகு, அமேசானின் ஜெப் பெசோஸ் மற்றும் எல்விஎம்எச்-ன் பெர்னார்டு அர்னால்ட்டிடம் முதலிடத்தை இழந்தார்.
81 வயதான எல்லிசன் ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைவருமான லேரி எல்லிசனின் பெரும்பாலான சொத்துக்கள் அவரது நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஒராகிள் நிறுவனத்தின் பங்குகள் ஏற்கனவே அதிகரித்து காணப்பட்ட நிலையில், புக்கிங்கில் எழுந்த வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் நம்பிக்கையளிக்கும் அறிவிப்புகளால், அந்த நிறுவனத்தின் பங்குகள் மேலும் 41 சதவீதம் அதிகரித்தன.
இதனால் 09.09.2025 அன்று ஒரே நாளில் ஆரக்கல் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 89 பில்லியன் டாலர் அதிகரித்தது. இது வரலாற்றில் இல்லாத ஒரு நாள் உயர்வாகும்.
இதனால் உலகின் முதல் இடப் பணக்காரர் என்ற இடத்தை எல்லிசன் பிடித்தார்.
இப்படி சில மணி நேரங்கள் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக எல்லிசன் இருந்த நிலையில், மீண்டும் மாறின எலான் மஸ்க் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயரத் தொடங்கியது. இதனால் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு வித்தியாசத்தில் மீண்டும் எலான் மஸ்க் முதலிடத்திற்கு வந்தார்.
இந்த இருவர் இடையிலான முதல் இடப் பணக்காரர் இடத்தை கைப்பற்றும் போட்டி, அமெரிக்க தொழில் வர்த்தகத் துறையினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










