தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக எதிர்வரும் 07.11.2024 அன்று காலை 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை குடிநீர் விநியோகத் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எல்.சுபாகரன் தெரிவித்தார்.
குறித்த நீர் வெட்டானது திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், தம்பலகாமம், கிண்ணியா, பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலகப் பகுதியிலும் குச்சவெளி பிரதேச செயலக பகுதியின் இறக்கக் கண்டி பாலம் வரையான பகுதியிலும் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் , இதனால் முன் கூட்டியே போதுமான நீரை சேமித்து வைக்குமாறும் மேலும் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










