தெமோதர மற்றும் எல்ல புகையிரத நிலையங்களுக்கு இடையில் உள்ள புகையிரதப் பாதையில் பாரிய பைனஸ் மரங்கள் இன்று (27.06.2025) காலை முறிந்து விழுந்ததில் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக தீயில் எரிந்து முறிந்து விழுந்த பைனஸ் மரங்களே புகையிரத பாதையில் முறிந்து விழுந்ததுள்ளதாக புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மரங்கள் முறிந்து விழுந்ததால் இன்று காலை 5.45 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்ட உடரட்ட மெனிகே புகையிரத சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரயில் பாதையில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகளில் புகையிரத ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதுடன் பணிகள் நிறைவடைந்ததும் மலையக புகையிரத சேவை வழமைக்கு திரும்பும் என புகையிரதத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










