இன்று விசேட போக்குவரத்துச் சேவைகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக இன்று (13.11.2024) விசேட போக்குவரத்துச் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பயணிகளின் வசதி கருதி தேவையான போக்குவரத்துச் சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்று புகையிரதத் திணைக்களம் என்பன அறிவித்துள்ளன.

அதற்கமைய, பயணிகளின் வசதி கருதி இன்றைய தினம் 80 பேருந்துகளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் 1,000 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுதவிர காவல்துறையினரின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 200 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்தார்.

அதேநேரம் இலங்கை போக்குவரத்துச் சபையின் பெரும்பாலான பேருந்துகள் தேர்தல் கடமைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, பயணிகளின் வசதிகளுக்காகத் தனியார் துறை, பேருந்துகளை வழங்கத் தயாராக உள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தனியார் பேருந்துகள் இன்றும் வழமை போன்று இயங்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளாந்தம் பயணிக்கும் புகையிரதங்களை விடவும் தேர்தல் காலத்தைக் கருத்திற் கொண்டு மேலதிக தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் புகையிரதத் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை வரையிலும் திருகோணமலை வரையிலும் பயணிக்கும் புகையிரதங்களில் மேலதிக புகையிரதப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர இன்று மாலை (13.11.2024), கண்டி வரையில் பயணிப்பதற்குத் புகையிரதம் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 16ஆம், 17ஆம் திகதிகளில் காங்கேசன்துறை வரை விசேட கடுகதி தொடருந்துகளையும் சேவையில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் புகையிரதத் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects