அஸ்வெஸ்வம நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை , அக் குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, முதியோர் கொடுப்பனவு பெறும் முதியோர்க்கான 3,000ரூபாய் கொடுப்பனவானது இம் மாதத்திலிருந்து குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட அச் சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று (22.11.2024) முதல் குறித்த முதியோர்க் கொடுப்பனவு வைப்பிலிடப்படவுள்ளது.
அதேநேரம், அஸ்வெசும கொடுப்பனவைப் பெறாத குடும்பத்தில் உள்ள 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்கள் அவர்களின் கொடுப்பனவை, வழமைபோல அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇