இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் காற்றின் தரமானது தொடர்ந்தும் மோசமான நிலையிலேயே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 21.11.2024 அன்று காலை டெல்லியின் வளி மாசு சுட்டெண்ணானது 379 புள்ளியாகப் பதிவாகியுள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
டெல்லியிலிருந்து புறப்படும் சில விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுவாசக்கோளாறு உள்ளவர்கள், நோயாளர்கள் மற்றும் சிறுவர்களைக் காற்றின் தரம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அந் நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇