பாதுகாப்பு செயலாளருக்கும் மாலைத்தீவு பாதுகாப்பு ஆலோசகருக்கும் இடையில் சந்திப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பில் உள்ள மாலைத்தீவு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஹசன் அமீர், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) 02.07.2025 அன்று பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். 

இச் சந்திப்பின் போது இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் ஆழமான ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து கலந்துரையாடினர். 

இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியும் கலந்து கொண்டார். 

பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதில் இரு நாடுகளின் நீண்டகால நட்பு மற்றும் பகிரப்பட்ட ஆர்வத்தை இச்சந்திப்பு எடுத்துக் காட்டுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects