தன்னார்வ தொண்டு நிறுவனமான LIFT நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான மூன்றுநாட்கள் நீளம் கொண்ட வதிவிடச் செயலமர்வு 22 முதல் 24 – 11 – 2024 வரை பாசிக்குடாவில் நடைபெற்றது.
வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுத்தல் எனும் தலைப்பிலான இச்செயலமர்வின் வளவாளர்களாக Designing Responses to Inhibit Violent Extremism (DRIVE) பயிற்றுவிப்பாளர்களான காமில் இம்டாட் மற்றும் ப.முரளிதரன் ஆகியோர் செயற்பட்டதுடன் இப்பயிற்சியில் LIFT நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், நிதிப்பணிப்பாளர் உட்பட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இவ்வேலைத்திட்டமானது HELVETAS நிறுவனத்தின் நிதி அனுசரணையில், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்துடன் இணைந்து LIFT நிறுவனத்தினால் மட்டக்களப்பில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
2 Responses
Kndipaha useful training. Engalukum chance kidaikuma lift?
Naanum lift thiddathil irunthen. Aanal intha chance kidaikavillei. Just miss. All the. Best friends. 👌