அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு, சிங்கப்பூர் வாழ் இலங்கை தமிழ் நண்பர்கள் (Singapore Ceylon Tamil Friends) எனும் அமைப்பினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
இவ் அமைப்பின் நிதி அனுசரணையில் ஒவ்வொன்றும் ரூ. 2,150/- பெறுமதியான 100 உலர் உணவுப் பொதிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடம் 02-12-2024 அன்று கையளிக்கப்பட்டது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும், அரச சார்பற்ற நிறுவனங்களும் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇