இலங்கையில் தேயிலை உற்பத்தியானது கடந்த ஆண்டு செப்டெம்பருடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு 12 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டெம்பரில் 21 230 665 கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ள போதிலும், இவ்வாண்டு 18 723 511 கிலோ கிராம் தேயிலையே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2 507 154 கிலோ கிராமால் குறைவடைந்துள்ளதாக தேயிலை சபை தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதத்தில் தேயிலை உற்பத்தி குறைவடைந்துள்ள போதிலும், கடந்த ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் உற்பத்தி சற்று அதாவது 0.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த ஆண்டு 9 மாதங்களில் 192 774 340 கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டில் முதல் 9 மாதங்களில் இந்த எண்ணிக்கை 193 235 339 கிலோ கிராமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇