இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கை இன்றுடன் (10.12.2024) முடிவடைவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று நள்ளிரவு 12 மணியுடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவடையும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்குக் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
மேலும், எக் காரணத்திற்காகவும் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் விண்ணப்பப் படிவங்களைப் பெற வாய்ப்பில்லை என்பதால், பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் இன்றைய தினத்திற்குள் விண்ணப்பப் படிவங்களை அனுப்புமாறும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇