உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விண்டோஸ் 10 (Windows 10) பயனர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 10 ற்கான இலவச ஆதரவு, அதிகாரப்பூர்வமாக நாளையுடன் (14.10.2025) நிறைவடையும் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி நாளையின் (14.10.2025) பின்பு , விண்டோஸ் 10 இயங்கும் சாதனங்களுக்கு மிக முக்கியமான பாதுகாப்புப் புதுப்பிப்புகள் (Security Patches), தொழில்நுட்பத் திருத்தங்கள் அல்லது புதிய அம்சங்கள் எதுவும் கிடைக்காது.
ஆதரவு முடிந்த பிறகும் விண்டோஸ் 10 இயங்கினாலும், பாதுகாப்புப் புதுப்பிப்புகள் இல்லாததால், அவை இணையத் தாக்குதல்களுக்கு இலக்காகக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பயனர்களை விண்டோஸ் 11க்கு மேம்படுத்துமாறு (Upgrade) வலியுறுத்திவருகிறது.
இருப்பினும் எல்லா கணினிகளும் அந்த மேம்பாட்டை மேற்கொள்ள முடியாது.
இத்தகைய பயனர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பெற, லினக்ஸ் அல்லது குரோம் ஓஎஸ் (Chrome OS) போன்ற மாற்று இயங்குதளங்களுக்கு மாறுவது நல்லது எனப் பரிந்துரைக்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










