எலிக்காய்ச்சல் (leptospirosis – லெப்டோஸ் பிரோசிஸ்) என்பது ஒரு பாக்டீரியாவினால் ஏற்படும் நோயாகும், இது சூறாவளி அல்லது வெள்ளத்திற்குப் பிறகு நமது சுற்றுப்புறங்களில் காணப்படும் தேங்கி நிற்கும் அசுத்தமான நீரினுடான நடமாட்டம் அல்லது அவற்றை பருகுவதற்கான சந்தர்ப்பங்கள் அல்லது குளிக்க பயன்படுத்தும் போது இவ் நோய் பரவக்கூடிய நிலை காணப்படுகின்றது.
எலிக்காய்ச்சல் பரவலுக்கான காரணங்கள் :
லெப்டோஸ்பைரோசிஸ் பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் அதாவது எலிகள், நாய்கள், கால்நடைகளான ஆடு, மாடு, பன்றிகள் மற்றும் வனவிலங்குகள் போன்றன வெள்ள நீர், ஆறுகள் அல்லது ஓடைகள் போன்ற நன்னீர்களையும் பாதுகாப்பற்ற குழாய் நீர் என்பவற்றுடன் கலந்த நீரை பருகுவதாலும், காயங்களில் அசுத்த நீர் படுவதால், அசுத்த நீர் கண் வாய் மூக்கு என்பவற்றிலுள்ள சீத மென்சவ்வில் படுவதனால் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீரால் மாசுபட்ட உணவினை உண்பதால் அதில் காணப்படும் பாக்டீரியா வாய் வழியாக அல்லது காயங்கள் அல்லது காயங்களின் கீறல்கள் ஊடாக அல்லது கண்கள், மூக்கு போன்ற மென்சவ்வினூடாக உடலினுள் செல்வதால் நோய் தொற்று ஏற்படுகிறது.
எப்படித் தப்பிப்பது :
– சுத்தமான கொதித்து ஆறிய நீரை பருகுதல் அவசியம்
– குளம் குட்டைகளில் குளிப்பதை தவிர்த்தல்.
– அனாவசியமாக தண்ணீருடான நடமாட்டங்களைத் தவிர்த்தல் .
– அசுத்த நீரில் வாய் கொப்பளிப்பதைத் தவிர்த்தல்.
– நிலத்தில் அல்லது சேற்று நிலத்தில் இறங்கும்போது செருப்பு அல்லது சப்பாத்து அணிதல்
– குறிப்பாக இயலுமானவரை வெள்ளத்தில் நடமாடுவதை தவிர்த்தல்.
மேலும் இந்நோய் மனிதனில் இருந்து மனிதனுக்கு நேரடியாக பரவாது.
அறிகுறிகள் :
நோய் அரும்புகாலம் 5 – 14 நாட்கள் என்பதால் பக்ரீயா தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் நோய் அறிகுறிகள் ஏற்படாது, குறைந்தளவு சதவீதத்தினர் அறிகுகளை காணப்படும், பெரும்பாலானவர்கள் ஒரிரு நாள் காய்சலுடன் சுகம் அடைவார்கள். இருப்பினும் காய்ச்சலுக்காக உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளாமால் தவிர்த்தால் மரணம் ஏற்படவும் வாய்ப்புக்கள் உண்டு.
மீண்டும் கன மழை எதிர்பார்க்கப்படுவதால் எலிக்காய்ச்சல் சடுதியாக பரவகூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகின்றன , எனவே மட்டக்களப்பில் மேற்படி பரவலுக்கான சாத்தியங்கள் உள்ள இடங்களில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
உங்களுக்கு உதவ உங்கள் பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும் வைத்திய சாலைகளும் எப்பொழுதும் தயாராக உள்ளது. காய்ச்சல் இருப்பின் உடனடியாக வைத்தியசாலையை நாடவும் .
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…