தேங்காய் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் – வெப்பமான காலநிலை

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டின் தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் ஆண்டின் முதல் சில மாதங்களில் நிலவிய மிகவும் வெப்பமான காலநிலையாகும் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞான சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.

அத்துடன்  நாட்டில் வருடாந்தம் பயிரிடப்படும் தென்னை மரக்கன்றுகளின் எண்ணிக்கை சுமார் 70 இலட்சம் வரை குறைந்துள்ளமையும்  இதற்கான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

இதேவேளை குறுகிய காலத்திற்குள் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படுவதென்றால் குரங்களுகளின் எண்ணிக்கையில் உடனடி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் மார்ச் முதல் ஜூன் வரை, நாட்டில் அதிக வெப்பநிலை உயர்வு மற்றும் தேங்காய் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

27-28 சென்டிகிரேட் வெப்பநிலையே தென்னை மரத்திற்கு உகந்த வெப்பநிலையாகும். 

ஆனால் 33 சென்டிகிரேடுக்கு மேல் செல்லும் போது, ​​தென்னை மரங்களின் மகரந்தச் சேர்க்கை குறைந்து, காய்க்கும் தன்மை குறைகிறது என  பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை உலகிலேயே அதிக தேங்காய் பாவனையைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்வதாகவும்,  ஒருவர் வருடத்திற்கு 114 தேங்காய்களை உட்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects