காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் வீடுகளில் பகுதியளவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நஷ்டஈட்டு காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் தலைமையில் 27.01.2025 அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர்கள், அனர்த்த விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயன்பெறுநர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வின்போது காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் பகுதியளவில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு முற்பணமாக ரூ.10000 வீதம் காசோலை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










