மட்டக்களப்பில் சர்வதேச மாண்புடன் கூடிய மாதவிடாய் தின நிகழ்வானது விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்சி திட்ட அதிகாரி இந்துமதி ஹரிகர தாமோதரன் தலைமையில் கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் 14.12.2024 அன்று இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.
டிசெம்பர் மாதம் 08 ஆம் திகதி சர்வதேச மாண்புடன் கூடிய மாதவிடாய் தினம் உலகலாவிய ரீதியில் நினைவு கூறப்பட்டு வருகின்றது.
“மாண்புடன் கூடிய மாதவிடாயை நிலைநிறுத்துவதற்கு பாலியல் உற்பத்தி சுகாதார உரிமைகளே அடிப்படை” எனும் தொனிப்பொருளில இந் நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது பாடசாலை மாணவிகள் மற்றும் தொழில் புரியும் மாதர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது.
பெண்களுக்கான மாதவிடாய் காலம் என்பது பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை மீறுகின்ற சந்தர்ப்பங்கள் என்பது சுட்டிக் காட்டப்பட்டதுடன் பெண்களின் உரிமைகளைப் பெற்று அனுபவித்து வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பாகவும் சுட்டிக் காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு, சிறுபராய திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் போன்ற பல விடயங்கள் இதன் போது வெளிக்காட்டப்பட்டது.
இந் நிகழ்வில் மீள்பாவிப்பிற்குரிய அணையாடை (Pad) தொடர்பான விளக்கங்கள் வழங்கிவைக்கப்பட்டதோடு அணையாடையினை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் வைத்திய அதிகாரி ஜூடி ஜெயக்குமார் சகாயதர்ஷினி, விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய நிர்வாக உத்தியோகத்தர் கந்தன் நிர்மலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇