மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அம்கோர் தேசியத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதி அனுசரனையில் ஆரம்பிக்கப்படவுள்ள சமூக பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம் பெயர்தலைக்கட்டுப்படடுத்தலும் என்னும் செயற்றிட்டத்தின் அறிமுக நிகழ்வும் பயிற்சிப்பட்டறையும் 19. 10.2023 அன்று நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் யோ. சிவயோகராஜன் தலைமையில் கல்லடியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்கோர் நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்று பணிப்பாளருமான ப. முரளிதரன் மண்முனைபற்று பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி. லோகினி விவேகானந்தராஜ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தார்கள்.
நிகழ்வில் மகளிர் சுய உதவிக் குழு பற்றிய அறிமுகம் மற்றும் அதன் செயற்பாட்டுக் கொள்கைகள் பற்றி ப. முரளிதரனால் விளக்கமளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டம் மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றி யோ. சிவயோகராஜனால் கலந்துரையாடப்பட்டது.
இந்த செயற்றிட்டத்தின் மூலம் மண்முனைப்பற்று பிரதேச செயலளார் பிரிவிலுள்ள 500 தேவையுள்ள குடும்பங்கள் அவர்களின் சமூக பொருளாதார அபிவிருத்தி மூலமாக பயனடையவுள்ளார்கள்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇