2024 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைத் தாண்டியுள்ளதுடன் , இந்த வருடம் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை 300,162 பேர் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்காக புலம்பெயர்ந்துள்ளனர் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் தாண்டியுள்ளது இது இரண்டாவது முறையாகும், இதற்கு முன்னர், 2022 ஆம் ஆண்டில் 310,948 தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டில், 177,804 ஆண்களும், 122,358 பெண்களும் வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் வெளிநாடு சென்றவர்களின் மொத்த எண்ணிக்கையில், 40.7 வீதமான பெண்களும், 60 வீதத்திற்கும் அதிகமான ஆண்களும் உள்ளடங்குவர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇