2024 ஆம் ஆண்டிற்கான பிரிட்டன் பொதுத் தேர்தலில் பிரித்தானிய நாட்டின் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்நாட்டின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பதவியேற்கவுள்ளார்.
2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 326 இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் தொழிலாளர் கட்சி 386 இடங்களிலும், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 94 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇