இன்று பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் மிதமான நிலையில்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரச் சுட்டெண் 38 தொடக்கம் 68 க்கு இடையில் இருக்கும். இது பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

கடந்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் மிதமான அளவிலும், கொழும்பு 07, யாழ்ப்பாணம், கேகாலை, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் நல்ல நிலையிலும் காணப்பட்டது.

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரச் சுட்டெண் 38 தொடக்கம் 68 க்கு இடையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலான பகுதிகளில் மிதமான அளவைக் குறிக்கிறது. அதேவேளையில் கொழும்பு 07, யாழ்ப்பாணம், வவுனியா, கேகாலை, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் ஆரோக்கியமான நிலையில் காணப்படும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும்.

அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects