2025ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான மகிழுந்துகளை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (18.12.2024) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2028ஆம் ஆண்டளவில் நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 2022 இல் இருந்த நிலைமைக்கு நாடு மீண்டும் செல்லாது எனவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇