சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் தேவைப்பாடுகள் மற்றும் மேம்பாடுகள் தொடர்பில் மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான கலந்துரையாடல் 17.12.2024 அன்று இடம்பெற்றது.
இச் சந்திப்பில் பிரதம செயலாளர் இ.இளங்கோவன், சுகாதார அமைச்சின் மூத்த உதவிச் செயலர் திருமதி அ.சாந்தசீலன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் பத்திரண, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் பதில் பொறுப்பு மருத்துவ அதிகாரி கோ.ரஜீவ் ஆகியோருடன், நலன்புரிச் சங்கத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇