ஒவ்வொரு ஆண்டும் 11,000ற்கும் மேற்பட்டோர் திடீர் விபத்துக்களில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விபத்துக்களால் நாளாந்தம் 30 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் விபத்துத் தடுப்புப் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித சிரிதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், வருடாந்தம் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் விபத்துக்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்கள், நீரில் மூழ்கி உயிரிழத்தல் போன்ற விபத்துக்கள் அதிகளவில் பதிவாகுவதாகவும் சுகாதார அமைச்சின் விபத்துத் தடுப்புப் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித சிரிதுங்க தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇