2024 டிசம்பர் 25 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 டிசம்பர் 24 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்பிரதானமாக சீரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில்பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் வடமேற்குமுதல் மேற்குவரையான திசைகளிலிருந்துவீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானதுமணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பேருவளையிலிருந்துகாலி மற்றும் மாத்தறை ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல்நிலை:
பேருவளையிலிருந்துகாலி மற்றும் மாத்தறை ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைஊடாக மட்டக்களப்புவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
(வளிமண்டலவியல் திணைக்களம்)
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇