நன்நடத்தை அடிப்படையில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 25-12-2024 அன்று மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
சிறிய குற்றங்களுக்காக , தண்டனை அனுபவித்து வந்த 12 கைதிகள் ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற பொது மன்னிப்பின் அடிப்படையில் இவ்வாறு விடுதலு செய்யப்பட்டதாக மட்டக்களப்பு சிறைச்சாலைகள் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தெரிவித்தார்.
சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப் பலர் பிரசன்னமாகி இருந்தனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇