கிழக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் புதிய தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர இன்று (27) நியமித்து அவர்களுக்கான கடிதத்தையும் வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்குளேயே இப் பணியிடங்கள் மாற்றியமைத்து நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைவாக, நிர்வாக பிரதிப்பிரதம செயலாளராக திரு விமலரத்னம் பதில் கடமைக்காக நியமித்துள்ளார்.
மேலும், முதலமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளராக என்.சிவலிங்கம், மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக ஏ.எல்.எம். அஸ்மி, கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்கள பணிப்பாளராக என்.மணிவண்ணன், கிழக்கு மாகாண காணி ஆணையாளராக வளர்மதி ரவீந்திரன், ஐ.எம். றிக்காஸ், கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளராகவும், என்.எம். நௌபீஸ் அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளராகவும், என்.தனஞ்சயன் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராகவும், ஏ.ரீ.எம். ராபீ கல்முனை மாநகர சபை ஆணையாளராகவும், எம்.ஆர். பாத்திமா ரிப்கா ஆளணி மற்றும் பயிற்சி பிரிவு பணிப்பாளராகவும், எஸ்.பிரகாஷ் மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளராகவும், யூ. சிவராஜா மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், எஸ். வருணி மோட்டார் போக்குவரத்து ஆணையாளராகவும், வீ. தேவநேசன் மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளராகவும், கே. இளம்குமுதன் கிராமிய அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇