கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 120,993 புகையிரத பயணங்களில் 32,844 புகையிரதங்கள் மட்டுமே சரியான நேரத்தில் இயங்கியதாக தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, மேலும் கடந்த ஆண்டு 10,077 புகையிரத பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தணிக்கை அலுவலகத்தின் தகவல்களின் படி, புகையிரத திணைக்களத்தால் இயக்கப்படும் 72% புகையிரதங்கள் திட்டமிட்டபடி இயங்கவில்லை. மேலும், கடந்த ஆண்டு 23 இன்ஜின்கள் மற்றும் 36 விசைப் பெட்டிகள் பயன்படுத்தப்படாமல் இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 1934ல் புகையிரத வலையமைப்பு (ரயில்வே நெட்வொர்க்) 1,521 கிலோமீட்டராக இருந்த போதிலும், 2021ல் அது 56 கிலோமீட்டர் குறைந்து 1,465 கிலோமீட்டராக இருந்ததாக தேசிய தணிக்கை அலுவலகம் கூறுகிறது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇