மட்டக்களப்பில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனினால் வழங்கி வைக்கப்பட்டது.
பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து அரச முகாமைத்துவ சேவையின் 1 ஆம் தர உத்தியோகத்தர்களுக்கான 10 நாட்களைக் கொண்ட வினைத்திறன் தடைதாண்டல் பாடநெறிப்பயிற்சி வகுப்பானது பழைய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
இவ் பயிற்சி நெறி வகுப்பினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், நிருவாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇