இலங்கை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருக்கும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை சகல துறைகளிலும் அடைந்துள்ள முன்னேற்றத்தையிட்டு வியட்நாம் தூதர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டாம் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு 25.12.2025 அன்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான தற்போதைய இராஜதந்திர உறவுகள் மற்றும் எதிர்காலத்தில் அந்த உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும் வியட்நாமின் உதவியுடன் இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், நாட்டின் சுகாதார சேவையின் தற்போதைய செயல்பாடு, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தேவைகள், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் இலங்கையுடனான வியட்நாமின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்தும் தூதுவர் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளின் முக்கிய அம்சங்களை நினைவு கூர்ந்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, எதிர்காலத்தில் வியட்நாமுக்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான அரசியல், இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை கட்டியெழுப்ப விரும்புவதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் தூதர் சுட்டிக்காட்டியதுடன் அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

1970இல் இருந்து 55 ஆண்டுகளாக வியட்நாமும் இலங்கையும் வலுவான உறவுகளைப் பேணி வருகின்றன.

சுகாதார செயலாளர் அனில் ஜாசிங்கே, வியட்நாம் தூதரகத்தின் பிரதி தலைவர் லு வான் ஹவோங், தூதரின் செயலாளர் ரம்யா நிலாங்கனி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects