பிரான்ஸ் நாட்டில் வாழும் இலங்கை முஸ்லீம் அமைப்பின் அனுசரனையில் அபாபீல் உதவும் கரங்கள் அமைப்பினால் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்கு உதவும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அமைப்பின் தலைவர் எம்.சி.எம்.அமீன் தலைமையில் காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வித்தியாலய அதிபர் ஏ.ருபாய்தீன் மற்றும் ஆசிரியர்கள், அமைப்பின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயம் மற்றும் காகித நகர் மில்லத் வித்தியாலயங்களைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 160 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇