தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா, அறிவு மற்றும் பொழுதுபோக்கை வழங்கும் இடமாக மேலும் தரமுயர்த்தப்படும் எனவும் இப் பூங்காவை வேறொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் எண்ணம் இல்லை எனவும் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக் ஷ தெரிவித்தார்.
தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட 08.01.2025 அன்று அவர், ஊழியர்களிடம் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, நாடுகளுடனான விலங்குகள் பரிமாற்றத் திட்டங்களின் கீழ் வெளிநாடுகளிலிருந்து விலங்குகளை இறக்குமதி செய்து மிருகக்காட்சிசாலையை கவர்ச்சிகரமான இடமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சந்தன ராஜபக் ஷ மேலும் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇