மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு கிளீன் ஶ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புதிய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிளீனிங் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு மூன்றாம் கட்டமாக கிளீன் ஶ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான தெளிவூட்டல்கள் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 21.01.2025 அன்று இடம் பெற்றது.

நீடித்த சமூக கலாசார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கையர் அனைவரும் ஒன்று பட்டு செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் பிரதான மூன்று விடயங்களான சமூக அடிப்படை, சுற்றாடல் அடிப்டை மற்றும் நெறிமுறை அடிப்படையிலான விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல்களை உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் வழங்கினார். மேலும் சுற்றுச் சூழல் சமூக மற்றும் நெறிமுறை முயற்சிகளின் நாடு தழுவிய முயற்சிகளை மீண்டும் நிலைநிறுத்துதற்கு அனைவரும் செயற்பட வேண்டும்.

அழகான தீவு சிரிக்கும் மக்கள் எனும் கருப்பொருளை அடைவதற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற் திட்டங்கள் தொடர்பான தெளிவூட்டல்களை உதவி மாவட்ட செயலாளரினால் விளக்கங்கள் வழங்கப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects