கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 2024 ஆம் ஆண்டில் 49.66% வளர்ச்சியை எட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 10,654.16 அலகுகளாகப் பதிவாகியிருந்த அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண், அவ்வாண்டின் இறுதியில் 15,944.61 அலகுகளாக உயர்ந்துள்ளது.
இதேவேளை, S&P SL20 சுட்டெண்ணின் படி, 2024 ஆம் ஆண்டில் கொழும்பு பங்குச் சந்தையின் வளர்ச்சி 58.46% ஆகும்.
அனைத்து பங்கு விலைக் குறியீடு மற்றும் S&P SL20 குறியீட்டின் இந்த பெறுமதிகள் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பெறுமதி என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை , இன்றைய (01.01.2025) வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5.69 ட்ரில்லின்களாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇