அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வலுவடைந்தமையினால், அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அச் சங்கத்தின் பொருளாளர் நிஹால் செனவிரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிரகாரம் , கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோகிராம் சீனி 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சீனி கிலோகிராம் ஒன்றின் புதிய விலை 265 ரூபாய் ஆகும்.
கோதுமை மா கிலோவொன்று 15 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 175 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பருப்பு கிலோவொன்று 65 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய. அதன் புதிய விலை 285 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇