இஸ்ரேல் – இலங்கைக்கான விமான சேவைகளை விஸ்தரிக்க நடவடிக்கை – இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான புதிய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத் தர உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிருந்து கட்டுநாயக்க வரை ஆரம்பிக்கப்பட உள்ள புதிய விமான சேவை தொடர்பில் 23.09.2025 அன்று தனது உத்தியோகபூர்வ முகபுத்தக தளத்தில் பதிவொன்றையிட்டு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.

அப்பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான (IZ) – 639 என்ற விமானம் இன்று (24.09.205) முதல் செவ்வாய்க்கிழமை தோறும் பிற்பகல் 6.30 மணிக்கு டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணிக்க உள்ளது. அதற்கமைய இன்று பயணமான விமானம் புதன்கிழமை காலை 6.15 மணியளவில் நாட்டை வந்தடைய உள்ளது.

இதே வேளை, ஓமான் மற்றும் மாலைத்தீவின் வான் பரப்புகளில் இஸ்ரேல் விமானங்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த விமானம் சீஷெல்ஸ் வழியாக கொழும்பை வந்தடைய  உள்ளது. பின்னர் மீண்டும் டெல் அவிவ் நோக்கிப் புறப்படும். இப்பயணத்துக்கு சுமார் 9.15 மணித்தியாளங்கள் ஆகக் கூடும். 

அதன் படி, இன்று (24.09.2025) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 22.30 மணியளவில் பயணிக்கவுள்ள விமானம் நாளை காலை (25.09.2025) 5.30 மணியளவில் டெல் அவிவ் விமான நிலையத்தை வந்தடையும்.

இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதை பிரதான நோக்கமாக கொண்டு மேற்படி விமான சேவை வாரத்திற்கு ஒரு முறை செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects