மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா உள்ளிட்ட தூதுவராலய அதிகாரிகள் குழுவினர் 22.01.2025 அன்று மட்டக்களப்பிலுள்ள பல சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட சமய தலங்களையும் பார்வையிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த தூதுவர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த சுற்றுலாத் தலமாக திகழும் ஒல்லாந்தர் கோட்டையை பார்வையிட்டதுடன், மட்டக்களப்பின் சிறப்பம்சங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தமது விஜயம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதே வேளை குறித்த தூதுவர் உள்ளிட்ட குழுவினர் 21.01.2025 அன்று திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects