உப்புப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு , இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1, 485 மெற்றிக் தொன் உப்பின் முதல் தொகுதி இன்று (27.01.2025) நாட்டை வந்தடைந்துள்ளது.
15 வருடங்களின் பின்னர் முதல் தடவை பொது பாவனைக்காக உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையால் உள்ளூர் உப்புத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் இறக்குமதி செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி , 30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதியை பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை தொடரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










