சிறுவர்களின் மாற்றுப் பராமரிப்பு தொடர்பான குறும்படப் போட்டி முடிவுகள்.

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சிறுவர்களின் மாற்றுப்பராமரிப்பு (Child Alternative Care) தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தப்பட்ட குறும்படப் போட்டிகளின் விருதுகள் வழங்கும் நிகழ்வு 01-02-2025 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (Unicef) நிறுவனம், CERI அரசசார்பற்ற நிறுவனம், DreamSpace மற்றும் மெதடிஸ்த மத்திய கல்லூரி ஊடகக் கழகம் என்பன இணைந்து பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்திய விழிப்புணர்வுக் குறும்படப் போட்டியில் உருவாக்கப்பட்ட எட்டு குறும்படங்கள் திரையிடப்பட்டு விசேட நடுவர் குழுவினால் தேர்வு செய்யப்பட்ட குறும்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

கடந்த ஆறு மாதகாலமாக முன்னெடுக்கப்பட்ட இவ் வேலைத்திட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு குறும்படம் உருவாக்குதல் தொடர்பான பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்பட்டு பின்னர் DreamSpace இன் வழிகாட்டலுடன் அம்மாணவர்களைக் கொண்டு குறும்படங்கள் உருவாக்கப்பட்டதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பார்வையாளர்களின் அபிமானம் பெற்ற குறும்படம் (Jury’s Choice Award), “Ultold Story” எனும் குறும்படத்திற்கும், சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடிய குறும்படம் (Technical Mastery in Film Making) விருது “உறவுகளைத் தேடும் பிஞ்சுகள்” எனும் குறும்படத்திற்கும், புதுமையான கதைசொல்லும் நுட்பம் (Innovative Storyline Award) “மாற்றத்தின் விதை” எனும் குறும்படத்திற்கும் மற்றும் தலைசிறந்த குறும்படம் (Masterpiece Storytelling Award) விருது “திடம்” எனும் குறும்படத்திற்கும் வழங்கப்பட்டன.

இத்திரைப்படங்களின் உள்ளடக்கம்,, கதைசொன்ன விதம், மனதைக்கவர்ந்த காட்சிகள் போன்றவற்றை உள்ளடக்கிய குழுநிலை விவாதம் இடம்பெற்றதுடன் இப்போட்டியில் பங்குபற்றிய பாடசாலைகளின் ஊடக குழுவிற்காக சில ஊடக உபகரணங்களும் பரிசாக வழங்கப்பட்டன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects