உத்தரவாத விலையின் கீழ் பெரும்போகத்துக்கான நெல் இன்று முதல் கொள்முதல் !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பெரும்போகத்துக்கான நெல், அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெற்களஞ்சியசாலைகளில் இன்று முதல் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து, நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல்லை கொள்வனவு செய்வதற்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.

நெல்லுக்கான உத்தரவாத விலை 05.02.2025 அன்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நாடு நெல் கிலோவொன்று 120 ரூபாவுக்கும், சம்பா நெல் கிலோவொன்று 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் கிலோவொன்று 132 ரூபாவுக்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரும்போகத்துக்கான நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுப் பல வாரங்கள் கடந்து விட்டதாகவும், தனியார் தரப்பினர் மிகக்குறைந்த விலையில் நெல்லை கொள்வனவு செய்வதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

இந் நிலையில் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.

அதேநேரம், அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவித்துள்ள போதிலும் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் உத்தரவாத விலை போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects