வேவ் டான்ஸ் ஸ்டூடியோ நிறுவனத்தினால் இலங்கைத் தமிழ் கலைஞர்களுக்கு மகுடம் சூட்டும் விழா எனும் தலைப்பில் “வேல்ஸ் விருதுகள் 2024” நிகழ்வு 20-01-2024 அன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.
வேவ் டான்ஸ் ஸ்டூடியோ நிறுவுனர் திரு. எஸ்.கிருஷ்ணகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி. சுஜாத்தா குலேந்திரன், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி பாரதி கென்னடி, மற்றும் வேல்ஸ் விருதுகள் ஆலோசகர் உட்பட பல பிரமுகர்களும், விருதுகள் பெற்ற கலைஞர்கள், அவர்களது குடும்பத்தினர், ஏனைய கலைஞர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
இதன்போது நாட்டின் பல பாகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்ட்ட 48 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதுடன், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
வேல்ஸ் விருது விழா 2024 எனும் இந்த நிகழ்வு மூன்றாவது முறையாக நடாத்தப்பட்டுவதாகவும், எதிர்வரும் காலங்களிலும் பல கலைஞர்கள் கௌரவிக்கப்பட இருப்பதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…