கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, இன்று (07.04.2026) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி பெலன்வத்தை, சித்தமுல்ல, எரவவல, நிவன்திடிய, போகுந்தர வீதி, ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தலை வீதி, மொரகெட்டிய வீதி, ஹிரிபிட்டிய, கொரகபிட்டிய வீதி, நியதகல வீதி, தொலேகடே சந்தி, குடமாதுவ 255 பஸ் வீதியின் வயல் பகுதி வரை மற்றும் புபுது மாவத்தை 255 பஸ் வீதியின் வயல் பகுதி வரை ஆகிய பிரதேசங்களில் இன்று (07.04.2026) இரவு 8.00 மணி முதல் நாளை (08.04.2026) காலை 8.00 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

நீரேந்துப் பகுதிகள் மூலம் இயங்கும் லபுகம மற்றும் கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் காரணமாகவே குறித்த சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் விநியோகிக்கப்படும் மேற் குறிப்பிட்ட பகுதிகளில் நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த நேரிட்டுள்ளதாக அந்தச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects