ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்த மூன்று புதிய தூதுவர்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் 24.02.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.

அதன்படி

01. கியூபா குடியரசின் புதிய தூதுவராக – பாட்ரிசியா லாசரோ பெகோ குவேரா, (Patricia Lázara Pego Guerra,)

02. கத்தார் நாட்டின் புதிய தூதுவராக – ஹமத் முகமது அப்துல்லா அல்-சனத் அல்-தோசாரி (Hamad Mohammed Abdullah Al – Sanad Al – Dosari,)

03. ஸ்லோவேனியா குடியரசின் தூதுவராக – டோமாஸ் மென்சின் (Tomaž Mencin)

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நற்சான்றிதழ் பத்திரங்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர், புதிய தூதுவர்களுடன் ஜனாதிபதி சுமூகமான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.

இந் நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects