இலங்கை பொலிஸ் நிறுவியுள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) ஒன்றை இலங்கை பொலிஸ் நிறுவியுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவவை ரேஞ்ச் பிரதி பொலிஸ்மா அதிபராகவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை பணிப்பாளராகவும் கொண்டு இந்த மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் நிறுவப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) கீழ் உள்ள வழக்குகளின் விசாரணையின் செயல்திறனை அதிகரிக்கும் பொருட்டு இந்த பணியகம் நிறுவப்பட்டுள்ளது.

மேலும், நிதிக் குற்றங்கள், அரச நிதியை தவறாகப் பயன்படுத்துதல், அரசு சொத்துக்கள் மற்றும் கடந்த காலங்களில் நடந்த பிற மோசடிச் செயல்களை விரைவாக விசாரிக்கவும் CCIB செயல்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் SSP புத்திக மனதுங்க குறிப்பிட்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects