மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரம் தென்னங் கன்றுகளை நடும் நிகழ்ச்சி திட்டத்தின் முதல் கட்ட நிகழ்வு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் 12-10-2023 அன்று நடைபெற்றது.
தென்னை மற்றும் பனை செய்கையினை ஊக்குவித்தல் மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்களின் உற்பத்திகளை அதிகரிக்க செய்யும் நோக்கில் இளைஞர் தேசிய மன்றம் மற்றும் புது குடியிருப்பு பயிற்சி நிலையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் 200 தென்னங் கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளரின் தலைமயில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் (நிருவாகம்) திரு. மனுல சமல் பெரேரா, உதவி பணிப்பாளர் (நிருவாகம்) உ. நிர்மாலி ஆகியோரும், மாவட்ட பனை அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிப் பனிப்பாளர் கே.விராஜ், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர், மற்றும் உத்தியோகத்தர்கள், தொழிற்பயிற்சி நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி, பயிற்றுவிப்பாளர்கள், நிலையத்தில் பயிற்சி பெறும் அழகுக்கலை நிபுணர்கள் என பலரும் கலந்துகொண்டு தென்னங் கன்றுகளை நாட்டினர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇