பதவிக்காலத்தை நிறைவு செய்யும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், பிரதமர் இடையில் சந்திப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கைக்கான தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 14.01.2026 அன்று நடைபெற்றது. 

இலங்கை – அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதில் ஜூலி சங் ஆற்றிய பங்களிப்பிற்கும், குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளியின் போது அமெரிக்கா வழங்கிய உதவிகளுக்கும் பிரதமர் தமது நன்றியை தெரிவித்தார். 

கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் போது, அமெரிக்கா சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவிகளையும், விமானப்படை மூலமான அவசர விநியோக சேவைகளையும் இலங்கைக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects