யாழ் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை பறக்க விட வேண்டாம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் , விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதனால் குறித்த பகுதிகளில் பட்டம் விடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த அறிவுறுத்தல் தொடர்பான சுவரொட்டிகள் விமான நிலையத்தை சூழவுள்ள , காங்கேசன்துறை , மாவிட்டபுரம் , வறுத்தலை விளான் , பலாலி , மயிலிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளதுடன் , அது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் அப்பகுதியில் ஒலிபெருக்கிகள் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கடந்த வாரம் சென்னையில் யாழ்ப்பாணம் வருகை தந்த விமானம் தரையிறங்க முற்பட்ட வேளை பட்டத்தினால் , சிரமங்களை எதிர்கொண்டதாகவும் ,  அதனால் பாரிய விபத்து ஏற்படவிருந்த நிலையில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects