வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதன் மூலம் அதிக அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ள கடற்படை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் 4 மாதங்களுக்குள் 6 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அண்மித்த அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கைகளை ஆரம்பித்த (கடந்த வருடம் ஒக்டோபர் 03 ஆம் திகதி முதல்) நான்கு மாதங்களுக்குள் 598,250 அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக பணிப்பாளர் நாயகம் (செயற்பாடுகள்) ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா தெரிவித்தார்.

இலங்கை கடற்படையானது வெளிநாட்டுத் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது.

குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects