டிஜிட்டல் அடையாள அட்டைகள் வழங்குவது தொடர்பில் வெளியான அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டிஜிட்டல் அடையாள அட்டையை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் பின்னர் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

அதன் பிரகாரம் இதற்கான தரவுகளை பெற்றுக்கொள்ளும் முறைமைகளை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன கூறினார்.

பிரதேச செயலகங்களின் செயற்பாடுகள் ஊடாக தரவுகளை வழங்குவதற்காக பொதுமக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக இணையம் மூலமான திட்டமொன்றும் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன குறிப்பிட்டார்.

முதலாம் கட்டத்தின் கீழ் டிஜிட்டல் அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்போரின் நிழற்படம் மற்றும் கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் கண் விழிகளின் அடையாளத்தை BIOMETRIC டிஜிட்டல் அடையாள அட்டையில் உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.

புதிதாக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்போருக்கு முதலாம் கட்டத்தின் கீழ் டிஜிட்டல் அடையாள அட்டையை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பழைய அடையாள அட்டைகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளையும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects