2025 ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதத்தின் முதல் 20 நாட்களில் 1 இலட்சத்து 75 ஆயிரத்து 436 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 428,197 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 68,668 ஆகும்.
மேலும் , ரஷ்யாவிலிருந்து 56,376 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 40,515 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 27,443 சுற்றுலாப் பயணிகளும்,சீனாவிலிருந்து 25,427 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 23,806 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 15,828 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










